Posts

Showing posts from June, 2017

மந்திரிமனை

Image
யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக மந்திரிமனை காணப்படுகிறது இது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் சங்கிலி மன்னன் காலத்தின் மந்திரி ஒருவரின் இருப்பிடமாக இது காணப்பட்டதனாலேயே மந்திரிமனை எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது வடஇலங்கையில் யாழ்மாவட்டத்தில் யாழ்நகரில் யாழ்ப்பாணம் பருத்தித்துரையில் பிரதான வீதியில்  சட்டநாதர் கோயிலின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது. இதன்​    அருகாமையிலே நல்லூர் கந்தசுவாமி கோயிலும் அமைந்துள்ளது. புவியியல் நில அமைவு ரீதியாக இதன் ஆள்கூற்று 9 40’ 38.9 “ north , 80,02,09” east க்கும் இடையில் அமைந்துள்ளது.                               ஆய்வு செய்தோர் – பேராசிரியர் ப.புஸ்பரட்னம்,பேராசிரியர் போ.இரகுபதி,யாழ்பல்கலைகழக தொல்லியல் வட்டார மாணவர்கள் தொல்லியல் தினைகள ஆய்வாளர்கள் இவ்விடத்திற்கு செல்லும் பாதை -  யாழபேருந்து நிலையம் – அங்கிருந்து வைத்தியசாலையூடாக 600 m பயணம் செய்து இடப்மாகவுள்ள யாழ்பருத்துறை வீதி ( AB 20) ஊடாக சென்று இடப்பக்கமாக திரும்பி 3.8 KM பயணம் செய்தால

ஊர்காவற்றுறைக் கோட்டை

Image
ஐரோப்பியரது நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக அமைந்துள்ள ஊர்காவற்றுறைக் கோட்டை வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹாமன்கில்  கோட்டையும் முக்கியமானது. இக்கோட்டையானது பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக ஊர்காவற்றுறை காரைநகரினைப் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியிலே போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்டதாகும். எனினும் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர்தர்கள் கைப்பற்றி ஆட்சி செய்தபோது இக்கோட்டையினை மாற்றியடைத்து தற்போதைய வடிவத்தினையும், பெயரினை|யும் வழங்கினர் எனக் கூறபப்டுகின்றது. ஐரோப்பியரது ஆதிக்கத்தின் சின்னமாகக் காணப்படுகின்ற இக்கோட்டையானது ஊர்காவற்றுறையின் அமைவிடம் காரணமாக அமைக்கப்பட்டதனைக் காணலாம். இக்கோட்டையானது முதன் முதலில் அமிநால் - டெமன்சில் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17ஆம் நூறற்hண்டில் கட்டப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.                                           பாளி இலக்கியங்களிலே (சூளவம்சத்தில்) ஊராத்தோட்ட அல்லது ஸ்ராத்தொட எனக்குறிப்பிடப்படுகின்ற இவ் ஊர்காவற்றுறை மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த இடமாகக் காணப்படுகின்றது. புராதன காலம் தொட்டே இலங்கையின் வடபுலத்தில்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

Image
வரலாற்று நோக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாண அரசு தொடர்பாக தோன்றிய தமிழ் இலக்கியங்கள் சோழர் வருகையுடன் கதிரமலையைத் தலைநகராகக் கொண்;ட அரசின் தலைநகர் சிங்கைன நகருக்கு இடம்மாறியதை சூசகமாக தெரிவிக்கின்றன. இவ் இலக்கியங்கள் தமிழகத்தில் சோழர் ஆட்சி மறைந்து ஏறத்தாழ 700 ஆண்டுகளின் பின்னர் தோன்றியிருந்தாலும் தமிழ் இராசதானி தோன்றிய வரலாற்றோடு சோழரின் வருகையை முன்னிலைப்படுத்தியிருப்பது  இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் அவர்களின் வகிபாகத்தை புறக்கணித்துவிட முடியாதென்பதைக் காட்டுகின்றது. முதலியார் இராசநாகம் கதிரமலையை வலிமேற்கில் உள்ள கந்தரோடை என அடையாளப்படுத்தி அதுவே நாகநாட்டில் தோன்றிய முதலாவது தமிழ் அரசு எனவும் அவ்வரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதற்கு சோழர் வருகையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஆமோதிக்கம் சுவாமி ஞானப்பிரகாசர் இவ்வரசின் தோற்ற காலத்தை கி.பி 8ஆம் நூற்றாண்டு என குறிப்பிடுகின்றார். ஏறத்தாழ இதே காலப்பகுதியில் கதிர மலையிலிருந்து ஆட்சி புரிந்த உக்கிரசிங்க மன்னன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை தோற்றுவித்த சோழ இளவரசியான மாருதப்புரவல்ல

சுண்டிக்குளம்

Image
சுண்டிக்குளம் - மறக்கப்பட்டு வரும் ஒரு புராதன தொல்லியற் சுற்றுலா மையம் இன்று நகரங்களாக இருக்கம் இடங்களெல்லாம் என்றும் நகரங்களாக இருந்ததில்லை. அதேபோல் மக்கள் வாழ முடியாதென ஒதுக்கப்பட்ட இடங்களெல்லாம் வரலாற்றில் என்றுமே ஒதுக்கப்பட்ட இடங்களாக இருந்ததில்லை. காலமாற்றம், உள்நாட்டு யுத்தம், பொருளாதார மற்றும் ஏற்பட்ட வளர்ச்சி, மக்கள் இடப்பெயர்வு, இயற்கை அனர்த்தம் என்பவற்றால் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாகப் பச்சி;லைப் பள்ளியில் உள்ள சுண்டிக்களத்தை எடுத்துக்காட்டலாம். நீண்ட காலமாக யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட இவ்விடம் கிளிநொச்சி நிர்வாகப் பிரிவுடன் இணகை;கப்பட்டுள்ளது. இதன் அமைவிடம் வரலாற்றுப் பழமை வாய்ந்த இடங்களாகக் காணப்பட்டுள்ள கடற்கரை சார்ந்த உடுத்துறை, தாளையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கிராமங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. சுண்டிக்குளத்தின் தென்பகுதி ஆணையிறவுக்கடல் நீரேரியின் முகத்துவராத்தில் அமைந்திருப்பதால் மழைக்காலத்தில் இவ்விடம் சிறு தீவு போலப் பார்ப்போரைக் கவரும் வண்ணம் அழகாகக் காட்சியளிக்கம். இலங்கையின் ஏனைய க

நல்லூர் நாற்றிசைக்கோயில்கள்

Image
நல்லூர் நாற்றிசைக்கோயில்கள் - தமிழரின் இராசாதானியை நினைவுபடுத்தும் சின்னங்கள் மனிதன் தோன்றி காலம் தொட்டு கடவுள் நம்பிக்கை அவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது. இதனால்தான் எமது சமூகம் தமது மூதாதையினரின் கடந்தகால வரலாற்று நினைவுகள் பலவற்றை மறந்த போதும் அவர்களது வாழ்வுடன் இரண்டறக் கலந்திருந்த கடவுள் நம்பிக்கையைத் தொட்hந்தும் பாதுகாத்து வருகின்றது. அவற்றின் வெளிப்பாடுகள் ஆலயங்களாகும். இன்று அவ்வாலயங்கள் பலவற்றின் தோற்றமும், வடிவமும் காலமாற்றத்திற்கு ஏற்ப மாறியிருந்தாலும் அவற்றின் நினைவுகள் குறிப்பிட்ட சமூகத்தின் நீண்ட கால வரலாற்றை தெரிந்து னெகாள்ள உதவுகின்றது என்பதில் ஐயமில்லை. இதற்கு நல்லூர் இராசதானி கால நாற்றிசைக் கோயில்களும் விதிவிலக்கல்ல. ஆகவே இன்று நாம் நல்லூரில் கோயில்களும் விதிவிலக்கல்ல. ஆகவே இன்று நாம் நல்லூரில் தரிசித்து தரிசித்து வரும் நாற்றிசைக் கோயில்களை சமகால வழிபாட்டு ஆலயங்களாக மட்டும் பார்க்காது எமது பாரம்பரிய பண்பாட்டு நினைவுச் சின்னங்களையும் தரிசிப்பதாகக் கொள்கின்றோம்.       தென்னாசியப் பண்பாட்டில் மக்களைப் பாதுகாக்கும் ஆலயங்களே அரசயைமு; பாதுகாக்கிறது என்ற கருத்து ப