ஊர்காவற்றுறைக் கோட்டை

ஐரோப்பியரது நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக அமைந்துள்ள ஊர்காவற்றுறைக் கோட்டை

வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹாமன்கில்  கோட்டையும் முக்கியமானது. இக்கோட்டையானது பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக ஊர்காவற்றுறை காரைநகரினைப் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியிலே போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்டதாகும். எனினும் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர்தர்கள் கைப்பற்றி ஆட்சி செய்தபோது இக்கோட்டையினை
மாற்றியடைத்து தற்போதைய வடிவத்தினையும், பெயரினை|யும் வழங்கினர் எனக் கூறபப்டுகின்றது. ஐரோப்பியரது ஆதிக்கத்தின் சின்னமாகக் காணப்படுகின்ற இக்கோட்டையானது ஊர்காவற்றுறையின் அமைவிடம் காரணமாக அமைக்கப்பட்டதனைக் காணலாம். இக்கோட்டையானது முதன் முதலில் அமிநால் - டெமன்சில் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17ஆம் நூறற்hண்டில் கட்டப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

                                          பாளி இலக்கியங்களிலே (சூளவம்சத்தில்) ஊராத்தோட்ட அல்லது ஸ்ராத்தொட எனக்குறிப்பிடப்படுகின்ற இவ் ஊர்காவற்றுறை மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த இடமாகக் காணப்படுகின்றது. புராதன காலம் தொட்டே இலங்கையின் வடபுலத்தில் சிறப்பிடம் பெற்ற துறைமுகமாக ஊர்காவற்றுறை விளங்கியமையைக் காணலாம். சிறப்பாக கி.பி 10ஆம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்த சோழ அரசன் தன் படைகளை ஊர்காவற்றுறையூடாக நகர்த்தியிருந்தமையும் அவனது கல்வெட்டு ஒன்ற இக்கோட்டையிலிருந்து மீட்கப்பட்டமையும் இப்பிரதேசத்தினுடைய வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றன. நயினாதீவு கல்வெட்டம் இவ்விடத்தின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அப்.பிரதேசமானது இந்தியாவின் வேதாரணியம் துறைமுகப் பிரதேசத்திலிருந்து கிட்த்தட்ட 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளதுடன் யாழ்ப்'பாணக் குடாநாடம்டின் மேற்கு நுழைவாயிலையும் அரண் செய்கிறது. இப்பிரதேசததினது முக்கியத்துவம் உணரப்பட்டே 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இங்கு கோட்டை அமைக்கப்பட்டது. இக்கடற்கோட்டையில் இங்கு சோழர் காலத்திற்குரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டமையானது சோழர் ஆதிக்கம் இங்கு நிலவியமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இக்கல்வெட்டைத் தாங்கிய கற்றூண்கள் இக்கோட்டையின் வடகிழக்குப் பக்கப் பதிவின் அடித்தளத்திலிருந்து 11அடி உயரத்திலே வைத்துக் கட்டப்பட்டிந்தது. இதுவே இலங்கை தென்னிந்தியத் தொடர்பில் ஊர்காவற்றுறை வகித்த முக்கிய பங்கினையே வெளிப்படுத்துவதாய் உள்ளது.


                                              இக்கோட்டையானது ஊர்காவற்றுறை காரைநகரினைப் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியிலே அமைக்கப்பட்டமைக்குப் பலகாரணங்கள் கூறப்படுகிறது. இக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும். இந்தியாவுக்குமிடையே செல்லும் கப்பல்களை அவதானி;ப்பதே முக்கிய நோக்காகக் காணப்பட்டது. சோழர்கள் ஊர்காவற்றுறை காரைதீவுக் கடற்பரப்பைத் தங்கள் முக்கிய கடற்படைத் தளமாகக் கொண்டிருந்ததைப்போல் போர்த்துக்கேயர்களும் இக்கடற்பரப்பை முக்கிய காவற்தளமாகக் கொண்டிருந்தனர். இதன் கேந்திர முக்கியத்துவம் பற்றிப் பார்க்கம் போது ஊர்காவற்றுறையும், களபூமித்துறைமுகமும் வங்காள விரிகுடா மூலம் இலங்கையின் மேற்குக் கரையின் ஊடாக யாழ்ப்பாணத்தினூடாகவும், பூநகரியூடாகவும் மன்னாரூடாகவும் கடல்வழி செல்லும் போது முக்கிய நுழைவாயிலின் இருபுறமும் அமைந்திருந்தமையால் முக்கியம் பெற்றிருந்தது. இதன் மூலம் யாழ்குடா நாட்டின் அரசு புரிபர்கள் தீவுப்பகுதியு|10டான கடல்வழிப்பாதையைத் தம் கட்டப்பாட்டின் கீழ் வைத்திருக்கம் பொருட்டு இவ்வாறு கோட்டையை அமைத்துக் காவல் புரியலாயினர். சோழராட்சிக்கும், ஐரோப்பியராட்சிக்கும் முன்பே மாந்தை, கந்தரோடை, ஊர்காவற்றுறை போன்ற இடங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களைக் கொண்ட பகுதிகளாக இருந்துள்ளன. இவ்விடத்தினுடைய முக்கியத்துவம் கருதியே இக்கோட்டை இங்கு அமைக்கப்பட்டதனைகன் காணலாம். அதாவது யாழ் குடாநாட்டின் வெளித்தொடர்புகளைக் கட்டுப்படுத்தக்கூடிய கேந்திர ஸ்தானமான்றில் இது அன்று அமைந்திருந்து எனலாம்.

                                                                         1658இல் ஒல்லாந்தர்கள் இக்கோட்டையைக் கைப்பற்றி இதனைத் திருத்தி அமை;பதற்காக டொன் ஸ்ரீவன் பூதத்ம்பி முதலியார் என்பவரை அதற்குப் பொறுப்பாக நியமித்தார். இதனாலேயே பூதத்தம்பி கட்டுவித்த கோட்டை எனப்பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. பன்றியின் கால் வடிவத்திலே இக்கோட்டை அமைந்துள்ளமையால் ஹாமான்கீல் என ஒல்லாந்தர்கள் தமது மொழியிலே அழைத்தனர். இப்பெயரே இன்றும் நிலைத்துள்ளது. மேலும் இக்கோட்டையானது மிகப்பழமை வாய்ந்த வியாவில் ஐயனார் கோவில், களபூமி பாலாவோடை அம்மன் கோவில், மணற்காடு மாரியம்மன் கோவில் ஆகியவற்றை உடைத்த கற்களைக் கொண்டே கட்டப்பட்டதாக யாழ்ப்பாண வைபவகௌமுகியும், காரைநகர் மான்மியமும் குறிப்பிடுகின்றன. இதனை ஈழத்துச் சிமம்பரம் கோவிலின் பரம்பரப் பண்டிதரான சிவ ஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்களது ஏட்டுப் பிரதியிலிரந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.

  மேலும் இக்கோட்டையின் அமைப்புப் பற்றிப் பார்க்கும்போது போர்த்துக்கேயருக்குப் பின்பு ஒல்லாந்தரால் முருகைக்கற்களினால் செப்பளிடப்பட்டிருந்தமையைக் காணலாம். மிகவும் நேர்;த்தியும், உறுதியும் மிக்கனவாக சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. எதிர்க்கோணக்கோடு 80மீற்றருக்கு மேற்படாது வலிமையான முருகைக் கற்பாறைகளால் கட்டடி;பட்டிருந்தது. சுவர்களும் கதவுகளும் அமைக்கப்பட்டு அதற்கு மேல் சீமெந்துக் கோபுரமும் மஒpயும் இருக்கும் வ6கையிலே அமைக்கப்பட்டிருந்தது மட்டுமன்றி உயரமான சுவர்களையும் கொண்டிருந்தது. மேலும் ஸ்ரெயிசர் தமது வரைபுகளிலிருந்து மூன்று மீற்றருக்கு மேலான உயரமான வளைவுள்ள வாசல் கதவுடனும் சிறிய இயற்குதுறையுடனும் இக்கோட்டை அமைந்திருந்தமை தெரிகிறது. துவக்குகள் இணைனக்கப்பட்ட காவலரன் கோபுரங்கள் அடங்கலாக எல்லாமாக எட்டுப்பக்கங்களை இது உள்ளடக்கி நிற்கின்றது.

                                                                   
 இக்கடற்கோட்டை ஆங்கிலேயர்கள் காலத்தில் வட இலங்கையின் கடற்பிரதேசத்தில் கள்ளக்கடத்தல், வர்த்தகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி மேற்பர்hவை செய்யும் நிலையமாகவும் பிரதான கங்கப் பரிசோதனை நிலையமாகவும் விளங்கியது. மேலும் சிறைக்கூடமாகவும் மருத்துவநிலையமாகவும் பாவிக்கப்பட்டது. நாட்டிற்குள் கடல் மூலம் வரும் எதிரிகளை வடபகுதியில் இக்nகுhட்டை நிலையமாகப் பயன்பட்டிருந்தது. மிக அண்மைக்காலத்தில் வட இந்திரயாவிலிருந்து குடியேறுபவர்களைப் பொதுச் சுகாதாத்திற்கென்று தனிமைப்படுத்தும் நிலையமாக இக்கோட்டை விளங்கியமையைக் காணலாம்.

                                           இக்கோட்டை பறற்p ஒல்லாந்தப் படைகளுடன் வருகை தந்த போல் டேயஸ் பாதிரியார் தனது இலங்கை பற்றி விபரிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். நாம் யாழ் நகர் நோக்கிச் சென்ற பொழுது எல்லாப் போத்துக்கேயப் படைகளும் யாழ் கோட்டையினுள் புகுந்து கொண்டன. இவர்கள் தமது கண்காணிப்பிலிருந்தே கோட்டையினுள் புகுந்து கொண்டன. இவர்கள் தமது கண்காணிப்பிலிருந்தே கோட்டையைக் காவல் செய்ய அருகேயிருந்த ஒஐ தீவினுள் அரண் ஒன்றை அமைத்திருந்தனர். நாம் எந்தவொரு உதவியும் வரவிடாது யாழ்கோட்டையைக் கைப்பற்றுவதாக இருப்பின் மேற்கூறிய தீவு அரனைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியம் உணரபப்ட்டது. இக்கோட்டையானது அந்தோனி அமிறல்டே மொன் செஸ் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. இது யாழ்ப்பாணத்திற்குள் நுழைவதற்கான சாவி என்றும் அழைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

                                                                                      பல்வேறுபட்ட வகைளிலும் முக்கிய இடத்தினை வகித்த ஒருமையப் பிரதேசத்திலே அமைந்த இக்கொட்டையானது ஐரோப்பியரது ஆதிக்கத்தின் நிகைவுச் சின்னமாக இது விளங்குகின்றது. இது சிலகாலம் தொல்லியல் திணைக்களத்தினர் பொறுப்பில் இருந்ததுடன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பகுதியாகவும் விளங்கியது. இன்று வரை முக்கியமான மையத்திலே அமைந்துள்ள இக்ஹீமென்கீல் கோட்டையானது பாதுகாப்பையும் சுங்கப்பரிசோதனையின் கட்டுப்பாட்டினைஷயும் கட்டப்படுத்தி வந்துள்ளமையைக் காணலாம். இன்றும் கடற்படையினர் வசம் காணப்படுகின்ற இக்கோட்டைப் பிரதேசமானது யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்து நிபந்தனை அவதானித்த முடிகிறது.

                                                                                                   யாழ்ப்பாண நகரின் தென்புறத்தில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை
இலங்கைத்தீவில் காலடி பதித்திருந்த இரண்டாவது ஐரோப்பிய இனத்தவர்களாக ஒல்லாந்தர் காணப்படுகின்றனர். இத்தீவில் முதன் முதலாக அந்நிய நாடொன்றின் கடல் வளத்தொழிநுட்பம், நீர்ப்போக்குவரத்துத் தொழிநுட்பமத், நீர், நிலத்தைப் பிரதான தளமாகக் டிகாண்ட படைக்கட்டுமானம், விசாலமான சுரங்கப்பாதை அமைப்புடனான கோட்டை, அரண்களுடன் கூடிய பாதுகாப்புத் தொழினுட்கம் ஆகியன உருவாக்கப்பட்ட காலமாக ஒல்லாந்தர் காலம் அமைந்தது.

                                                                        1505அல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர்கள் படிப்படியாகக் கரைடீயோரப் பகுதிகளைக் கைப்பற்றினர். 1619இல் யாழ்ப்பாண இராச்சியம் அவர்களால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஒருகோட்டை அவர்களால் அமைக்கப்பட்டது.

         1958இல் போர்த்துக்கேயரிடமிருந்து ஒ;லாந்தர் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றினர். போர்த்துக்கேயரது கோட்டைகள் அமைக்கப்பட்ட இடங்களில் ஒல்லாந்தர் தமது கோட்டைகளை நிறுவினர். தமது தாயகச் சூழ்நிலை காரணமாக நில, நீர் அரண்களை ஒருங்கே கொண்டு சிறப்பாகக் கோட்டைகளை அமைப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவ்வாறு அமைக்கப்பட்ட கோட்டைகளுள் யாழ்ப்பாணக் கோட்டை மிகவும் பிரபல்யமானதாகும்.

                             யாழ்ப்பாணக் கோட்ஐ; அந்நியர் ஆதிக்க நினைவுச் சின்னமாக இன்று பார்க்கப்பட்டாலும் அதன் தோற்றப் பினன்னணியில் ஈழத்தமிழர் வரலாறும் உள்ளடங்கி இருப்பதைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

      யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து இரு கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் ஒன்று முதலாம் இராசேந்திர சோழன் காலத்துக்கு உரியதாகும். இதனைவிட இக்கோட்டைப் பகுதியில் உரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை போல் பீரிஸ் என்பவரின் யாழ்ப்பாண இராச்சியம் எனும் நூலில் காணலாம். மேலும் யாழ்ப்பாணக் கோட்டையின் புறச்சுவர்களிலும் வேறு சில இடங்களிலும் பழைய காலக் கட்டடப் பகுதிகள் உள்ளனவெனக் கூறப்படுகின்றது. இன்றைய கோட்டையின் ஆரம்பம் தமிழரசர் காலத்தில் ஏற்பட்டிருக்க முடியும் என்றும் பின்பு இவ்விடத்தில் போர்த்துக்கேயரால் ஒரு கோட்டை அமைக்கப்பட்டு அது பின்பு ஒல்லாந்தரால் திருத்திக் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்றும் கருத முடிகிறது. நல்லூரைத் தலைமையாகக் கொண்டு ஒருதொன்மை மிகுந்த இராச்சியம் நிலைத்திருந்த போது யாழ்ப்பாணக்கோட்டை அமைந்துள்ள இடமும் முக்கியத்துவமுடைய பிரதேசமாக விளங்கி இருக்க வாய்ப்புண்டு எனலாம்.

   யாழ்ப்பாணக்கோட்டை அமைந்த சுற்றாடற்பகுதி, அதன் அமைவிடம் அதனுடன் கடல்வழியாகத் தொடர்கொள்ளக்கூடிய பண்ணைத்துறை, அராலித்துறை, ஊர்காபவற்றுறை ஆகிய இடங்களும் கோட்டைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உரோம நாணயங்களும் எமக்கு இவ்விடத்தின் வரலாற்று முக்கிதய்துவத்தைக் காட்டகின்றன.

                                                         மண்கும்பான், சாட்டி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிக்குடிகள் பற்றிய சான்றுகளும் உரோம நாணயம், உரோம மட்பாண்டம் என்பனவும் கிரேக்க, உரோம அரேபிய சீனத் தொடர்புகள் இப்பிரதேசங்களுடன் நிலவி இருந்தமைக்குச் சான்றுகளாக கொள்ளப்படத்தக்கவை ஆகும்.

                                         தென்இந்தியாவில் எழுச்சி பெற்ற சோழரது எழுச்சிக் காலத்திலும் கூட இப்பிரதேசம் சோழரது கட்டப்பாட்டில் இருந்திருக்க முடியும். மேற்கில் ஏற்பட்ட அரேபிய எழுச்சியைத் தடுக்கவும் இலங்கையின் பெருநிலப்பரப்பில் ஏற்பட்ட சிங்களவரது ஆட்சியைத் தடுத்து நிறுத்தவும் தென்கிழக்காசிய நாடுகளுடன் தமது வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தவும் டீசாழர்கள் இப்பிரதேசத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இதை நிறுவுவதற்குச் சோழர்கால நாணயங்களும் சோழரை நினைவுபடுத்தமு; செம்பியன்பற்று, வளவர்கோன் பள்ளம், கங்கை கொண்டான் போன்ற இடப்பெயர்களும் கமால் வீதி, நாராந்தனை ஆகிய இடங்களில் கிடைத்த இவர்கள் காலச்சற்பங்களும் இவ்விடத்தில் முக்கிஙயத்துவத்தைக் காட்டகின்றன.

                                                போர்த்துக்கேயர் நல்லூர் ஆலயத்தை அழித்து இவ்விடத்தி;ல் கோட்டை அமைத்;ததாகக் கூறப்படுகின்றது. இக்கோட்டையின் மேற்குப் புறத்தில் பழைமையான கட்டடங்களுக்குரிய கற்றூண்கள் காணப்படுகின்றன. 10ஆம் நூற்றாண்டுக்குரிய கிரந்த எழுத்துக்கள் கொண்டவை. கோட்டையின் வடக்காக உள்ள நிலப்பகுதி இன்று ஐநூற்றுவர் வளைவு என்று அழைக்கப்படுகின்றத. இங்கு ஐநூற்றுவர் வளைவு என்பது சோழர் காலத்துக்கரிய முக்கிய வணிககணம் ஆகும். ஆகவே தற்போது கோட்டை அமைந்துள்ள இடம் சோழர் காலத்தில் முக்கியத்துவமுடைய இடமாக இருந்திருக்கும் என்று கருத முடிகிறது. ஆரியச் சக்கரவர்த்தி ஒருவனுடைய வெற்றி பற்றிக்கூறும் கோட்டகம் சாசனத்தில் வரும் 'பொங்கொலி' நீர் சிங்கை நகர்' எனும் கூற்று இம்மன்னர் கால அரண்மனை அல்லது கட்டடம் ஒன்ற கடற்கரையில் இருந்தமையை எமக்கு எடுத்துக்காட்டகிறது. இதுவும் போர்த்துக்கேயருக்கம் யாழ்ப்பாண அரசர்கட்கும் இடையிலான போராட்டம் கொழும்புத்துறைக்கம் பண்ணைத்துறைக்கும் இடையில் நடைபெற்றதாகக் கிடைக்கும் தகவல்களும் எமக்கு இப்பிரதேசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
            போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது இங்கு இருந்த இராட்சியங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாண இராச்சியம் 1621இல் இவர்கள் வசம் வந்தது. போர்த்துக்கேயத் தளபதி பிலிப் டி ஒலிவேரா நல்லூர் கந்தசுவாமி கோயிலை அத்திவார்துடன் இடிதது அழித்து நல்லூரில் இருந்து ஆட்சி நடாத்தியபோது தென்னிந்திய உதவியுடன் சில திழ்த்தளபதிகள் இவனுடைய ஆட்சிக்கு எதிராகக் காலத்துக்குக் காலம் படையெடுப்புகளை மேற்கொண்டனர். அவை தோல்வியில் முடிந்தன. ஆயினும் போரியல் ரீதியில் நல்லூர் ஒரு பாதுகாப்பான இடம் அல்ல என்று டி ஒலிவேரா உணர்ந்தான். பாதுகாப்பான ஒரு இடத்தில் போட்டை அமைப்பதற்கு அவன் முடிவு செய்தபோது முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்கசாலை அமைத்த அஇவ்விடமே அவனால் கவரப்பட்டது.


                                                     போர்த்துக்கேயரால் முதலில் இங்னுகு அமைக்கப்பட்ட இக்கோட்டை சதுர வடிவில் காணப்பட்டத. இது பின்னர் ஒல்லாந்தரால் கோண வடிவில் மாற்றியமைக்கப்பட்டது. இக்கோட்டையின் மிக முக்கிய கட்டடக் கலைச்சிறப்பு வாய்ந்த அமைப்பு அதன் மதில் சுவரே ஆகும். இது உச்சியில் சராசரியாக 20 அடியாகவும் அடிபப்குதியில் சில இடங்களில் 40 அடியாகவும் விரிந்து அமைந்திருக்கிறது. மதில் வெளிப்புறம் ஏறத்தாழ 6அடி அகலத்தில் முருகைக்கற்களால் கட்டப்பட்டது.

                                                                                  இந்தக்கோட்டை ஐந்து கொத்தாளங்களைக் கொண்டிருந்த.த இவற்றில் இரண்டு கொத்தாளங்கபள் கடல் நீரேரிப் பக்கம் கடலிலிருந்து வரும் ஆபதம்தை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் ஏனைய மூன்றம் நிலப்பக்கம் பார்த்தபடியும் அமைந்திருந்தன. இந்த மதில்கள் ஒவ்வொன்றிலும் நீளம் 554 அடிகள் ஆகும். கொத்தளம் ஐந்தையும் உள்ளடக்கியதாக உட்கோட்டையின் சுற்றளவு 6300 அடிகள் ஆகும். இவ்வாறுநு ஒல்லாந்தரின் இக்கோட்டை கொத்தள அமைப்பு பாதுகாப்பு நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.

                                                                         உட்கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கம் அகழி மிகுந்த தொழில்நுட்பத்திறன் கொண்ட அமைப்பாகும். அகழியின் வெளி மதிற் சாய்வுச்சுவராடு தாழ் கொத்தளங்கள் நான்கு அமைந்துள்ளன. இவை கோட்டை மதில் ஒவ்வொன்றின் நிலப்பகுதிக்கும் நேர் எதிரில் அகழிகன்கு அப்பால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை வடிவில் சிறியவையாக இருப்பதால் சின்னக்கோட்டைகள் என்று அழைப்பர். யாழ்ப்பாணக்கோட்டைக்குள் அமைந்த பிற கட்டடங்களை நோக்கும்போது பிற்காலத்தில் ராணி மாளிகை அமைந்த இடத்தில் ஒல்லாந்த லெப்ரினன் கவர்னர் மாளிகை அமைந்திரந்தது என்பர். இதைவிட இங்கு ஒல்லாந்தரது காவல்துறை வசிப்பிடங்கள், தேவாலயம்,அசிறைக்கூடங்கள், அதிகாரிகளுடைய நிர்வாக மையங்கள் என்பனவும் காணப்பட்டனள.


                                                            ஒல்லாந்தர் காலத்திலும் அதற்குப் பின்பும் மிக முக்கியம் பெற்றிருந்த யாழ்ப்பாணக் கேபட்டை 1983 களுக்கப் பின்னர் படைகளின் பாதுகாப்பு நிலையாக மாறியது. தற்பொழுது போரினால் சிதைவடைந்துள்ள யாழ்கோட்டைப்பகுதி புற்களாலும் புதர்களாலும் சூழப்பட்டுத் தனது அடையாளத்தை, வரலாற்றுச் சிறப்பைத் தொலைத்து நிற்கின்றது. இந்நிலை தொடருமேயானால் ஒரு பாரம்பரிய வரலாற்றுப் பெருமை மிக்க நிலையைத்தை இளஞ்சமூகத்தினர் அறிந்திட முடியாத சூழல் உருவாகும் எனலாம்.

http://www.jaffna.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=191&Itemid=271&lang=ta







Comments

  1. நல்ல தகவல்களைத் தொகுத்தளித்துள்ளீர்கள். பாராட்டுதல்கள். இதில் ஐந்நூற்றுவர் வளைவு என்ற சொற்றொடர் மாத்திரம் சற்றே திருத்தத்திற்குரியது. இதை ஐந்நூற்றுவர் வளவு என்று தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும் என்ற நூலில் திரு செல்லையா கிருஷ்ணராசா - 1998 ல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையினர் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
    "யாழ்ப்பாணம் கோட்டை வாயிலிலிருந்து நல்லூரைப் பற்றிய காலத்தால் முற்பட்ட கல்வெட்டு நல்லூர் என்ற பகுதியிலிருந்து கிடைத்தது. "நல்லூருக்கு அண்மித் ததாக ஐநூற்றுவன் வளவு என்ற காணிப் பெயர் ஒன்று இன்று வரைக்கும் இருந்துகொண்டிருப்பது என்பது (காணிப் பெயர்) சோழர் காலத்துடன் அம்மையத்தினை இணைப்பதாக அமைகின்றது" என்று கூறியுள்ளார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மந்திரிமனை

நல்லூர் நாற்றிசைக்கோயில்கள்