மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

வரலாற்று நோக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

யாழ்ப்பாண அரசு தொடர்பாக தோன்றிய தமிழ் இலக்கியங்கள் சோழர் வருகையுடன் கதிரமலையைத் தலைநகராகக் கொண்;ட அரசின் தலைநகர் சிங்கைன நகருக்கு இடம்மாறியதை சூசகமாக தெரிவிக்கின்றன. இவ் இலக்கியங்கள் தமிழகத்தில் சோழர் ஆட்சி மறைந்து ஏறத்தாழ 700 ஆண்டுகளின் பின்னர் தோன்றியிருந்தாலும் தமிழ் இராசதானி தோன்றிய வரலாற்றோடு சோழரின் வருகையை முன்னிலைப்படுத்தியிருப்பது 

இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் அவர்களின் வகிபாகத்தை புறக்கணித்துவிட முடியாதென்பதைக் காட்டுகின்றது. முதலியார் இராசநாகம் கதிரமலையை வலிமேற்கில் உள்ள கந்தரோடை என அடையாளப்படுத்தி அதுவே நாகநாட்டில் தோன்றிய முதலாவது தமிழ் அரசு எனவும் அவ்வரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதற்கு சோழர் வருகையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஆமோதிக்கம் சுவாமி ஞானப்பிரகாசர் இவ்வரசின் தோற்ற காலத்தை கி.பி 8ஆம் நூற்றாண்டு என குறிப்பிடுகின்றார். ஏறத்தாழ இதே காலப்பகுதியில் கதிர மலையிலிருந்து ஆட்சி புரிந்த உக்கிரசிங்க மன்னன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை தோற்றுவித்த சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டதத்ரசியாக்கி அக்கோயிலின் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்தான் என யாழ்ப்பாண வைபமமாலை கூறுகின்றது.

                                                                                யாழ்ப்பாண வைபவமாலையில் இடம்பெறும் பல வரலாற்றுச் சவம்பவங்கள் பாளி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஜதீகங்களின் மாற்று வடிவமாக உள்ளன. இருப்பினும் யாழ்ப்பாணத்தின் தொன்மை பற்றி இவ்விரு நூல்களிலும் கூறப்படும் வரலாற்றுச் செய்திகளில் சில உண்மைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.ட இதற்கு வலிகாமத்தின் மேற்கு ஆதராமாகத் திகழ்கின்றன. 1917இல் கந்தரோடையிலும் அதன் பீரீஸ் அநுராதபுரத்தை அடுத்து இலங்கையில் தோன்றிய புராதன நகரமாக கந்தரோடையைக் குறிப்பிடுவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதன் காரஒணமாகத்தான் பாளி நூல்களில் அடை;யாளபப்டுத்தி கூறுகின்றன என்பதுமு வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். இது பாளி இலக்கியங்களில் நாகதீபம் எனவும், தமிழகத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் நாகநாடு எனவும் குறிப்பிடப்படுகின்றத. இங்கு அநுராதபுரத்திற்கு சமமான காலத்தில் இருந்து சிற்றரசர்களின் ஆட்சி இருந்ததை ஆணைக்கோட்டை கந்தரோடையில் கிடைத்த தொல்லியல் வகையில் பாளி இலக்கியங்கள் இங்கு ஆட்சியில் இருந்த நாக அரசு பற்றக் கூறுகின்றன. கி.பி.1ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று இங்கு ஆட்சி புரிந்த நாக மன்னன் தீபராஜா என்ற விருதுப் பெயருடன் ஆட்சி புரிந்ததாக கூறுகின்றது.
   
    இவ்வாறு தனியொரு பிராந்தியமாக சிற்றரசின் ஆட்சிக்குட்பட்ட யாழ்ப்பாணத்தில் கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் முகம மரபிற்கு உட்படாத வழிபாட்டு மரபுகளும் தமிழ்ப் பௌத்தமும் நிலவியதாக தெரிகின்றது. ஆயினும் கி.பி 6ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கமும் பல்லவ அரசின் எழுச்சியும் யாழ்ப்பாணத்தில் அதிலும் சிறப்பாக வட இலங்கையில் பல்லவர் கால அரசியல், சமய ஆதிக்கம் நிலவக் காரணமாகியத. அக்காலத்தில் இருந்தே ஆகம மரபில் கற்களைக் கொண்டு இந்து ஆலயங்கள் அமைக்கும் மரபு இலங்கையில் தோற்றம் பெற்றது. இதைத் தமிழகத்திற்கு அடுத்த நிலையில் இலங்கையில் இருந்த திருக்கொணேஸ்வரமும், திருக்கேதீஸ்வரமும் நாயன்மார்களினால் போற்றிப் பாடக் காரணமாகியது. இக்காலத்தில் இருந்து வட இலங்கை தமழகப் படையெடுப்பாளருக்கம் தென்னிலங்கையில் அரசுரிமை இழந்த சிங்கள மன்னர்களிற்கும் பாதுகாப்பு வழங்கும் இடமாக மாறியது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் அரசுரிமையை இழந்த 'மாணா' என்ற சிங்கள மன்னன் அநுராதபுர மன்னனுக்கு பயந்து நாகதீபத்தில் காலப்பகுதியில் பல்லவ மன்னன் நாக நாட்டு இளவரசியை மணந்தான் என பல்லவச் செப்பேடு கூறுகிறது. கி.பி 8ஆம் நூற்றாண்டில் அநுராதபுர அரசிற்கு எதிராக நாகதீபத்தில் இருந்து ஸ்ரீநாக என்ற தலைவன் படையெடுத்த செய்தி கூறப்படுகின்றத. கி.பி 835இல் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறஸ்ரீவல்லபன் வடஇலங்கையில் வந்திறங்கிய போது இங்கிருந்த தமிழர்கள் அவனுடன் இணைந்து அநுராதபுர அரசை வெற்றி கொண்டதாக அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உட்படாது தனியொரு ஆதிக்கம் நிறைந்த பிராந்நிதயமாக திகழ்ந்ததைக் காட்டுகின்றது.

                                           இவ்வாறான காலக் பகுதியில் தான் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் கி.பி 10ஆம் நூற்றாண்டளவில் வட இலங்கை மீது படையெடுத்தான். இப்படையெடுப்பு நாகதீபத்தில் நடந்தததாக கூறும் சூளவம்சம் இப்படையெடுப்'பால் அநுராதபுர அரசிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுகின்றது. அதேவேளை இப்படையெடுப்பை பெரும் வெற்றியாக சோழச் சாசனங்கள் கூறுகின்றன. இதற்காக முதலாம் பராந்தக சோழன் ஈழமும் மதுரையும் கொண்ட கோப்பாரகேசரி வர்மன் என்ற விருதுப் பெயரைப் பெற்றதாக அவன் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வரலாற்று அறிஞர்கள் சோழரது ஆதிக்கம் அநுராதபுரத்தில் ஏற்பட முன்னர் நாகதீபத்தில் ஏற்பட்டதையே கூறுகின்றன. இதற்கு சோழர் ஆட்சி தொடர்பான கோயில்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், அதிகளவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இங்கே கதிரமலை அரசின் வீழ்ச்சியை சோழர் வருகையுடன் தொடர்புபடுத்தும் தமிழ் இலக்கியங்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழவம்சத்து அரசி மருதப்புரவல்லி மாவிட்டபுரம் அமைந்த வலிகாமம் அவர்களின் அரசியல், பண்பாட்டு செல்வாக்கிற்கு உட்பட்டதாகவும், இத்துறைமுகம் அமைந்த இடத்தைச் சிலர் தற்காலத் pதருவடிநிலை எனவும், வேறு சிலர் காங்கேசன்துறை எனவும் குறிப்பிடுகின்றனர். ஆயினும் இவ்விரு இடங்களின் அமைவிடம் கடல் வழித் தொடர்பிற்கு சாதகமாக தமிழகத்திற்கு அண்மையில் அமைந்திருந்தமை தமிழக பண்பாடு முதலில் இங்கு பரவுவதற்குநச் சாதகமாக அமைந்தது. சோழ சாசனம் ஒன்று வட இலங்கையில் வலிகாமத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பெருமளவு யானைகளை தமிழகம் கொண்டு சென்றதாகக் கூறுகின்றது. மாவிட்டபுரம் அமைந்த சுற்றாடலில் காணப்படும் வளவர்கோளன் பள்ளம் காங்கேசன்துறை சோழக்கல்வெட்டுக்களில் அதிலும் குறிப்பாக பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படும் பெயராகும். இவற்றை நோக்கம்போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழருடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகின்றது.

                                  ஆயினும் கி.பி16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் யாழ்ப்பாணத்தில் 50ற்கு மேற்பட்ட இந்து ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் 1982இல் குமாரசாமிக் குருக்களால் கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் மத சுதந்திரம் அழிக்கப்வபட்டதை தொடர்ந்து இவ்வாலயமும் மீளக் கட்டபப்ட்டதைக் காட்டுகின்றது. ஆயினும் இதற்கு தொன்மையான வரலாறு இருக்கலாம் என்பதை நாதீபம் பற்றிய வரலாற்றுச் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.




https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

Comments

Popular posts from this blog

ஊர்காவற்றுறைக் கோட்டை

மந்திரிமனை

நல்லூர் நாற்றிசைக்கோயில்கள்