சுண்டிக்குளம்

சுண்டிக்குளம் - மறக்கப்பட்டு வரும் ஒரு புராதன தொல்லியற் சுற்றுலா மையம்

இன்று நகரங்களாக இருக்கம் இடங்களெல்லாம் என்றும் நகரங்களாக இருந்ததில்லை. அதேபோல் மக்கள் வாழ முடியாதென ஒதுக்கப்பட்ட இடங்களெல்லாம் வரலாற்றில் என்றுமே ஒதுக்கப்பட்ட இடங்களாக இருந்ததில்லை. காலமாற்றம், உள்நாட்டு யுத்தம், பொருளாதார மற்றும் ஏற்பட்ட வளர்ச்சி, மக்கள் இடப்பெயர்வு, இயற்கை அனர்த்தம் என்பவற்றால்
இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாகப் பச்சி;லைப் பள்ளியில் உள்ள சுண்டிக்களத்தை எடுத்துக்காட்டலாம். நீண்ட காலமாக யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட இவ்விடம் கிளிநொச்சி நிர்வாகப் பிரிவுடன் இணகை;கப்பட்டுள்ளது. இதன் அமைவிடம் வரலாற்றுப் பழமை வாய்ந்த இடங்களாகக் காணப்பட்டுள்ள கடற்கரை சார்ந்த உடுத்துறை, தாளையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கிராமங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. சுண்டிக்குளத்தின் தென்பகுதி ஆணையிறவுக்கடல் நீரேரியின் முகத்துவராத்தில் அமைந்திருப்பதால் மழைக்காலத்தில் இவ்விடம் சிறு தீவு போலப் பார்ப்போரைக் கவரும் வண்ணம் அழகாகக் காட்சியளிக்கம்.
இலங்கையின் ஏனைய கடற்கரைச் சுற்றுலாக் கிராமங்களுக்கு இல்லாத சிறப்பு சுண்டிக்குளத்திற்கு உண்டு. நீண்ட வெண்மையான, தூய்மையான கடற்கரைப் பரப்பு, உயர்ந்த மணல் மேடுகள், கடற்கலங்கள் தரிப்பதற்கேற்ற கற்பாறைகள் அற்ற ஆழமான கடல், சுத்தமான கடல் நீர், கடற்கரையோரத்திலும் உட்பகுதியிலும் நீண்ட நெடுந்தூரத்திற்குக் காணப்படும் தென்னந்தூப்பு என்பன இக்கிராமத்தின் சிறப்பம்சங்கள், இவ்விடத்தின் இயற்கையமைப்புக் காரணமாக இலங்கை அரசு இவ்விடத்தைச் சூழவுள்ள செழிப்பான காட்டுப் பிரதேசத்தைப் பறவைகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதுடன் சுண்டிக்குளத்துடன் இணைந்த ஆணையிறவுக் கடல் நீர் ஏரியை இறால் நன்னீர் வளர்ப்புப் பிரதேசமாகவும் மாற்றியுள்ளது. ஆயினும் அண்மையில் ஏற்பட்ட சுனாமி அனர்;த்தத்தால் இந்த அணைக்கட்டு உடைக்கப்பட்டதால் கடல் நீர் ஏரி நன்னீர் வளர்ப்புப் பிரதேசத்துடன் கல்ந்துள்ளது.

                                               பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆணையிறவு ஊடான தரைவை மற்றும் புகையிரதப் பாதை திறக்கப்பட முன்னர் குடாநாட்டையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கம் போக்குவரத்துப் பாதைகளாக மூன்று வழிகள் காணப்பட்டன. அவற்றுள் ஒன்று கொழும்புத்துறை கல்முனையூடான கடல் வழிப்பாதை ஆகும். கொழும்புத்துறையிலிருந்து கல்முனை, பூநகரி இலுப்பைக் கடவை, மன்னார், அநுராதபுரம் ஊடாகக் கொழும்பு செல்வதற்கான கடல் தரைவழிப்பாதையாக இது இருந்ததால் தான் இவ்விடத்திற்குக் கொழும்புத்துறை என்ற பெயர் ஏற்பட்டது.
                                        
                                        15ஆம் நூற்றாண்டு கோட்டைம ன்னன் சப்புமால் குமரய்யாவின் படைகள் இப்பாதையூடாகவே யாழ்ப்பாணம் வந்ததாகக் குயில்விடு தூதுப்பிரபந்தம் என்ற சிங்கள இலக்கியம் கூறுகிறது. மற்றைய பாதை கச்சாய் - பூநகரி ஊடான கடல் வழிப்பாதையாகும். இப்பாதையூடாகக் தென்மராட்சி மக்கள் இலகுவாகப் பெருநிலப்பரப்பை அடைய முடிந்தது. இன்று பெருநிலப்பரப்பில் உள்ள பூநபரி, நல்லூர், பலல்வராயன்கட்டு, தியாகம் போன்ற ஊர்களில் வாழும் மக்களின் உறவினாத்கள் பலர் தென்மராட்சியைச் சேர்ந்தவர்களா இருப்பதறக்கு இக்கடல் வழிப்பாதையே காரணமாக இருந்ததெனப் பேராசிரியர் புஸ்பரட்ணம் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

                                                              வடமராட்சியையும் பெருநிலப்பரப்பையும் இணைத்த இன்னொரு முக்கிய பாதை வல்லிபுமர், அம்பனை, குடத்தனை, நாகர்கோவில், தாளையடி, மருதங்கேணி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, சுண்டிக்குளம் ஊடான தரை வழிப்பாதை ஆகும். இதில் சுண்டிக்குளம் ஒரு முக்கிய கேந்திர மையமாக இருந்திருக்கலாம் என்பதைத் தற்காலத்தில் குறிடியிருப்புக்கள் எதுவும் இல்லாத அப்பிரதேசத்தில் காணப்படும் புராதன ஆவுஞ்சிக்கற்கள், சுமைதாங்கிககள்,  போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலக் காவலரண்கள், கடற்கரைக் கண்காணிப்பு மையங்கள், சிறிய வெளிச்சவீடுகளின் சிதைவுகள், பாதுகாப்பு அரண்களின் அழிபாடுகள், நிர்வாகக் கட்டங்களின் அழிபாடுகள், பண்டைய ஆலயங்களின் அத்திவாரங்களின் மேல் பிற்காலத்தில் கட்டப்பட்ட இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் என்பன எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் சுண்டிக் குளத்திற்கு இதன் அயல் பிரதேசங்களான வல்லிபுரம், உடுத்துறை, செம்பியன்பற்று, வெற்றிலைக்கேணி போன்ற இடங்களைப் போல் இற்றைக்கு 2000 ஆண்டுகளுனக்கு குறையாத தொன்மையான வரலாறு உண்டு என்பதில் ஐயமில்லை. 

                                                      இதை அண்மைக்காலத்தில் கலாநிதி இரகுபதி (1981) பேராசிரியர் புஸ்பரட்ணம் (1994) போன்றோர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆய்வுகளின் போது பெறப்பட்ட கிறிஸ்தவ சகாப்த காலத்தை ஒட்டிய பலவகைப்பட்ட மட்பாண்டங்கள், புராதன கூரை ஓடுகள், பண்டைய கால இந்திய மற்றும் பிற்கால ஐரோப்பியர் நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் புராதன இந்து ஆலயங்களின் அழிபாடுகளுடன் போர்த்துக்கேயர், ஒல்hந்தர் கால கிறிஸ்தவ ஆலயங்களின் அழிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                                 அண்மையில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் தாக்கத்தால் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட கடற்கரைக் கிராமங்களில் சுண்டிக்குளமும் ஒன்றாகும். இங்கிருந்த அழகான கடற்கரையும், செழிப்பு மிக்க தென்னந் தோப்புக்களும் இச்சுனாமியால் அலங்கோலப்படுத்தப்பட்டுப் பெறுமதி மிக்க பல தொல்லியல் எச்சங்களும் சிதைவடைந்தன. இது தொடர்பாக உலக கலாசார பாதுகாப்பு அமைப்பின் அனுசரனையுடன் பேராசிரியர் புஸ்பரட்ணம் மேற்கொண்ட ஆய்வின்போது வரலாற்றுப் பெறுமதிப்புடைய பூர்வீக தொல்லியற் சின்னங்கள் சிதைவடைந்திருந்தமையை எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றுட் பண்டைய மக்கள் பயன்படுத்திய மரக்கொட்டால் வடிவமைக்கப்பட்ட கிணறு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கல், சீமெந்து என்பன பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் கடற்கரையில் வாழ்ந்த மக்கள் நீரை எடுப்பதற்குக் கிணற்று வடிவில் சுடுமண்ணை அமைத்து அல்லது அவற்றை மணற்பாங்கான இடங்களிற் புதைப்பதன் மூலம் அசுத்தம் நீhபில் கலக்காது நீரைப் பெற்றனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கிணறே சுனாமியின் போது கடற்கரைப் பகுதியிலிருந்து வெளிக்கிளம்பியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இவ்வனர்த்தத்தால் மன்னனுடைய புதையுண்டிருந்த வழிபாட்டுக் ககட்டடங்களின் எச்சங்கள் பலவும் மண்ணின் மேற்படைக்கு எடுத்து வரப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

                                                    பிரித்தானியர் ஆட்சியோடு சுண்டிக்குளம் மக்கள் வாழாத கிராம மகாமாறினாலும் 1985 வரை அங்கு ஐந்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

Comments

Popular posts from this blog

ஊர்காவற்றுறைக் கோட்டை

மந்திரிமனை

நல்லூர் நாற்றிசைக்கோயில்கள்