மந்திரிமனை


யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக மந்திரிமனை காணப்படுகிறது இது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் சங்கிலி மன்னன் காலத்தின் மந்திரி ஒருவரின் இருப்பிடமாக இது காணப்பட்டதனாலேயே மந்திரிமனை எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இது வடஇலங்கையில் யாழ்மாவட்டத்தில் யாழ்நகரில் யாழ்ப்பாணம் பருத்தித்துரையில் பிரதான வீதியில்  சட்டநாதர் கோயிலின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது. இதன்​    அருகாமையிலே நல்லூர் கந்தசுவாமி கோயிலும் அமைந்துள்ளது. புவியியல் நில அமைவு ரீதியாக இதன் ஆள்கூற்று 9 40’ 38.9 “ north, 80,02,09” east க்கும் இடையில் அமைந்துள்ளது.

                              ஆய்வு செய்தோர் – பேராசிரியர் ப.புஸ்பரட்னம்,பேராசிரியர் போ.இரகுபதி,யாழ்பல்கலைகழக தொல்லியல் வட்டார மாணவர்கள் தொல்லியல் தினைகள ஆய்வாளர்கள்
இவ்விடத்திற்கு செல்லும் பாதை -  யாழபேருந்து நிலையம் – அங்கிருந்து வைத்தியசாலையூடாக 600m பயணம் செய்து இடப்மாகவுள்ள யாழ்பருத்துறை வீதி (AB 20) ஊடாக சென்று இடப்பக்கமாக திரும்பி 3.8KM பயணம் செய்தால் இவ்விடத்தை அடையாலாம்.

கட்டிடத்தின் வரலாற்று பின்னணி

மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரசர் காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமாகும். இது கம்பிரமான தோற்றத்தையும் வேலைப்பாடுளையும் உடைய கட்டிடமாகும்.போர்த்துக்கேயரால் யாழ்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக இருந்துள்ளது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும் இதனை சுற்றிவுள்ள அரசுகளும் யாழ்பாண அரசுடன தொடர்படைவை ஆகும். இது 13 நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக் கட்டிடம் செங்கட்டி சுண்ணாம்பு சாந்து மரங்கள் ஓடுகள்கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இதில் உள்ள அமைப்பு அலங்கார வேலைப்பாடுகள் ஒல்லாந்தர் காலத்துக்குரிவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருநதாலும் இதில் உள்ள சில கூறுகள் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள், மரத்தாலான சில தூண்கள் போதிகைகள் போன்றன யாழ்ப்பாண தமிழ் மன்னர்களால் ஆரம்பத்தில் கட்டப்பட்டு இவ் மந்திரி மனை  ஒல்லாந்தராலும் ஏனையவராலும் புதிதாக சில அம்சங்கள் இ​ணைக்கப்பட்டு பெருமளவிற்கு திருத்தி அமைக்கப்பட்ட கட்டிடமாக காணப்படுகின்றது.

      தற்போதைய நிலையில் இக்கட்டிடம் ஏறதாழ 70*80 மீற்றர் அளவுளை கொண்ட நிலப்பரப்பில் அதன் தெனமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இக்கட்டிணடத்தின்  கலையம்சமாக தமிழரின் ஆட்சியின் பாரம்மரிய கலையம்சங்களை வெளிக்காட்டும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழரின் திராவிட கட்டிடக்கலைக்குறிய அம்சங்களையும் ஐரோப்பியரின் அன்னிய கட்டிடக்கலை அம்சங்களையும் கொண்டு காணப்படுகின்றது. இதன் வெளி தோற்றம் அன்னியர் கலைமரபை வெளிப்படுத்தி நின்றாலும் சுதேச கலை மரபும் கலந்து கணப்படுகின்றது. இதற்கும் யமுனா ஏரிக்குமிடையில் சுரங்க பாதை இருந்ததாக கூறப்படுகின்றது. சுதேச கலை  மரபை வெளிப்படுத்தும் வகையில் மரச்செதுக்கல் வேலைப்பாடுகள் ஓட்டினால் கூரை வேயப்பட்டிருத்தல் மரவேலைப்பாடுடைய தூண்கள் கப்புகள் சமையலரை முறை கிணறு கல்லாளான வட்டத்தொட்டி சில கட்டிட அமைப்பு முறைகள் காணப்படுகின்றன.

                 கட்டத்தின் தற்போதைய நிலை – மந்திரி மனைக்கட்டம் சற்று அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது.தொல்லியல் தி​​ணைக்களம் தற்போது இதனை ஒரு மரபுரிமை சின்னமாக்கி சில திருத்தங்கள் மேற்கொண்டு பாதுகாத்து வருகின்றன.


                                     தனிப்பட்ட மனிதர்கள் சிலரின் தாக்கத்தினாலும் , சுற்றுலா பயணிகளின் தாக்கம், சுவர்களில் தமது பெயர்களை பொறித்தல், கட்டிட சிதைவு போன்ற காரணங்களினால் இது அழிவடைகிறது. தற்போது இவ்வழிவுகளில் இருந்து ஒரளவுதொல்லியல் திணைக்களத்தினால் முறையான பாதுகாப்பின் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.மேலும் சிறப்பாக பாதுகாக்க நடவடிக்கைகளை பாதுகாப்பதன் மூலம் இத் தமிழரின் இராச்சிய நினைவுச்சின்னம் வரலாற்றுபெருமையை எதிர்கால சந்த்தியினர்க்கு ஏற்படுத்தும் அளவிற்கு அமையும் என்றால் அது மிகையாகாது.




Comments

Popular posts from this blog

ஊர்காவற்றுறைக் கோட்டை

நல்லூர் நாற்றிசைக்கோயில்கள்